5300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதன் பேசியது தமிழா?; ஆராய்ச்சியில் ஆச்சர்யம்


ஐரோப்பாவில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் உள்ள டைசென்ஜான் என்ற சிகரத்திற்கு, சில வருடங்களுக்கு முன்பு சென்ற ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள், அங்கு பனியில் சிக்கிக் கிடந்த ஒரு மனித உடலை கண்டுபிடித்தனர். ஆராய்ச்சியில், அந்த மனிதன் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

கடல்மட்டத்தில் இருந்து 11000 அடி உயரத்தில் இருந்ததால், அந்த உடலை பனி கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைத்திருந்துள்ளது. அந்த உடலின் அருகில், அந்த மனிதன் பயன்படுத்திய ஆயுதங்களும் இருந்துள்ளன. உலக வரலாற்றில் இத்தனை ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு மம்மி இதுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைக்கவில்லை. அந்த உடலை பொக்கிஷமாக கருதிய விஞ்ஞானிகள், அந்த மனிதனுக்கு ‘ஊட்சி’ என்று பெயர் வைத்துள்ளனர். தோளில் 6 அடி வில்லும், 14 அம்புகளும், ஒரு தாமிட கோடாரியுடன், கரடி தோலினால் ஆன உடைகளுடன் அந்த மனிதன் இறந்து கிடந்துள்ளார். அவரின் முதுகில் கூரான அம்பு குத்தப்பட்டு இறந்திருக்கலாம் என்பது முதல், அப்போது அவரின் வயது 45 இருக்கலாம் என்பது வரை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். மேலும், கம்ப்யூட்டர் மூலம் அவரின் முழு உருவத்தையும் வடிவமைத்து, அவரைப் போல் ஒரு மெழுகுச் சிலையையும் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 

 அதை விட முக்கியமானது, நீண்ட காலம் போராடி, அவரின் குரல்வளையை ஆராய்ந்து பார்த்து, அந்த மனிதனின் குரல் எப்படி இருந்திக்கும் என்பதை அவர்கள் கண்டிபிடித்துள்ளனர். அந்த குரல் ஒலிக்கும் ஆடியோவினையும் அவர்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதில் ஆ, இ, ஈ, உ, ஊ என்று உச்சரிப்பதை பார்த்தால், நமக்கு அது தமிழ் போலவே தோன்றுகிறது. ஆனால், அந்த ஒலி அனைத்து மொழிகளுக்கும் பொதுவானதுதான் என்றும் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv