நுளம்பை கட்டுப்படுத்த புதிய வகை செயலி அறிமுகம்....


நுளம்பு என்பது உலகிலுள்ள சிறிய வகை உயிரினமாக இருந்த போதிலும் மனிதர்களுக்கு பெரிய அச்சுறுத்தலாகியுள்ளது.

பல்வேறு விடயங்களின் ஊடாக நுளம்புகள் ஏற்படுத்தும் நோய் காரணமாக இன்று உலகில் நுளம்பினால் பரவும் நோயை கட்டுப்படுத்த பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த செயற்பாடுகளினால் பல்வேறு கண்டு பிடிப்பும் மேற்கொள்ளப்படுகின்றது.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட கண்டுபிடிப்பிற்கமைய “விட்டா லைப்” என்ற நிறுவனத்தினால் புதிய தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்தி விட்டா என்ற பெயரில் செயலி (app) ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலியின் ஊடாக நுளம்புகள் பரவக்கூடிய இடங்களுக்கு அருகில் யாராவது இருந்தால் அந்த நபர்கள் தொடர்பிலும் இடங்கள் தொடர்பிலும் தகவல் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் குறித்த நபரை சுற்றியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றால் ஏற்படும் மரணங்கள் தரவுகள் போன்றவற்றை இந்த செயலியின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த செயலியை வைத்திருக்கும் மற்றுமொரு நபர் இருந்தால் அவர்களின் தரவுகளுக்குள் நுழைந்து பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த தரவுகளை புதுப்பித்துக் கொள்ள முடியும், மேலும் இதனை இலங்கையினுள் தொலைபேசிகளில் இலவசமாக தரவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்.

இலங்கையில் நுளம்புகளால் பரவும் டெங்கு நோய் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த செயலி பயனுள்ளதாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv