உங்களுக்கு தெரியுமா: கடல் நீர் உருவானது எப்படி?


பூமியை விண்வெளியில் இருந்து நாம் பார்க்கும் போது, நீல நிறமாகத் தெரியும்.

ஏனெனில் பூமியின் 70 சதவீத பரப்பை கடல் போர்வை போல கொண்டுள்ளது. இதன் காரணமாகவே பூமியானது நீல நிறத்தில் காட்சியளிக்கிறது.

கடல் எப்படி தோன்றியது என்ற கேள்வி பலரிடத்திலும் இருந்திருக்கக் கூடும்.

இந்த கேள்விக்கான பதிலை அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்த போது இரண்டு விதமான விளக்கங்களைக் கூறுகின்றார்கள்.

கடல் எப்படி உருவானது?

முதல் விளக்கம்

பூமி தோன்றி சுமார் ஒரு கோடி ஆண்டுகள் வரை, எரிமலைகள் வெடித்துச் சிதறியது.

அப்போது பாறைகளுக்குள் அடைப்பட்டிருந்த நீர்த்துகள்கள் வாயுக்களாக வெளியேறி வளிமண்டலத்தில் கலந்துவிட்டது.

இதனால் சுற்றுப்பாதையில் இருந்த பூமியானது குளிரத் தொடங்கியது.

அப்போது வாயு மண்டலத்தில் இருந்த நீராவியானது, மழையாகப் பொழிந்தது. மேலும் இந்த மழையானது பல லட்சம் ஆண்டுகளுக்கு தொடர்ந்து பெய்து தீர்த்தது.

இதனால் பூமியின் துகள்களில் இருந்து கடல்கள் உருவானது என்று கூறுகின்றார்கள்.

இரண்டாவது விளக்கம்

விண்வெளியில் உள்ள வால் நட்சத்திரங்களும், விண்கற்களும் பல லட்சம் ஆண்டுகள் தொடர்ந்து மோதியதால், அதிலுள்ள நீர் அனைத்தையும் பூமியின் மேற்பரப்பானது உறிஞ்சிக் கொண்டது.

பின் பூமியில் உள்ள எரிமலையின் செயல்பாட்டால், அந்த நீரானது ஆவியாகி, குளிர்ந்து மழையாக கொட்டித் தீர்த்தது. இதனால் தான் கடல் உருவானது என்று கூறுகின்றார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv