ஐரோப்பாவில் அரங்கேறும் இனவொதுக்கல்! புலம்பெயர்ந்த மாணவர்களுக்கென தனி கழிப்பறை....


இத்தாலியில் உள்ள கத்தோலிக்க தனியார் பள்ளி ஒன்றில் இரண்டு குடியேறிய மாணவர்களுக்கு மட்டும் தனி கழிப்பறை வலியுறுத்தி மற்ற மாணவர்களின் பெற்றோர் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் மீட்கப்பட்ட 9 மற்றும் 11 வயதுடைய எகிப்திய, எத்தியோப்பிய நாட்டை சேர்ந்த இரண்டு குழந்தைகள் சார்டீனியாவில் கன்னியாஸ்திரீகள் நடத்தி வரும் பள்ளிக்கூடத்தில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிக்கூடத்தில் புலம் பெயர்ந்த மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறையை மற்ற மாணர்வகள் பயன்படுத்துவதன் மூலம் நோய் ஏற்படவாய்ப்பு உள்ளதாகவும்.

இதனால், இருவருக்கு மட்டும் தனி கழிப்பறை கட்டி தரும்படி பள்ளி நிர்வாகத்திடம் வலிறுத்தி மற்ற மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, புலம் பெயர்ந்த மாணவர்கள் நல்ல நலத்துடன் இருப்பதாக மருத்துவ சான்றிதழ் அளித்தும், இரண்டு பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகளை பள்ளியில் இருந்து நிறுத்தியுள்ளனர். பலர் தங்கள் பிள்ளைகளையும் நிறுத்த போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டு மாணவர்களுக்கு மட்டும் தனி கழிப்பறை அமைத்து தர நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

ஆனால், பள்ளி நிர்வாகம் இந்த இனவொதுக்கலை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும், கன்னியாஸ்திரீ ஒருவர் கூறியதாவது, இந்த பிள்ளைகள் கடுமையான போர் சுழலில் வாழ்ந்தவர்கள். அவர்கள் இங்கு அமைதியான சுழலில் வாழ நாம் உதவ வேண்டும் என கோரியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv