பிரபல நடிகரின் 650 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீடு விற்பனை...


பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல நட்சத்திர தம்பதியின் வீடு ரூ.650 கோடிக்கும் மேல் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல ஹோலிவுட் நட்சத்திர தம்பதியான பிராட் பிட் மற்றும் ஏஞ்சலீனா ஜோலி ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக ஏஞ்சலீனா ஜோலி கடந்த மாதம் விவாகரத்திற்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், இருவருக்கும் சொந்தமான பிரான்ஸ் நாட்டில் உள்ள சொகுசு வீட்டினை விற்பனை செய்ய இருவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் உள்ள Brignoles நகருக்கு அருகே அமைந்துள்ள ஒரு கிராமப்புற பகுதியில் தான் இந்த ஆடம்பர மாளிகை அமைந்துள்ளது.

Chateau Miraval என அழைப்படும் அந்த சொகுசு வீட்டை கடந்த 2008ம் ஆண்டு பிராட் பிட் மற்றும் ஏஞ்சலீனா ஜோலி இருவரும் சேர்ந்து சுமார் 40 மில்லியன் யூரோ(642,68,70,000 இலங்கை ரூபாய்) விலைக்கு வாங்கியுள்ளனர்.

சுமார் 1,200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஆடம்பர வீட்டில் தான் கடந்த ஆகஸ்ட் 2014ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது.

35 அறைகள் கொண்ட இந்த வீட்டில் ஆடம்பர வசதிகள் அனைத்தும் உள்ளன. கோடைக்கால விடுமுறையை தங்களது 6 பிள்ளைகளுடன் பிராட் பிட் மற்றும் ஜோலி இந்த வீட்டில் தான் கழிப்பார்கள்.

இந்நிலையில், இருவரும் தற்போது விவாகரத்து பெறவுள்ளதால் இந்த சொகுசு வீட்டை விற்பனை செய்ய இருவரும் முடிவு செய்துள்ளனர்.

எனினும், இந்த சொகுசு வீட்டின் தற்போதைய சந்தை மதிப்பு 40 மில்லியன் யூரோவிற்கும் அதிகமாக இருக்கும் எனக்கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv