சூரியன் அழியபோகின்றதா? அதிர்ச்சி தகவல்.....


நாம் இன்று இப்புவியில் வாழ்வதற்கு சூரியனை தவிர வேறு எந்த சக்தியும் பிரதானம் இல்லை என்று பயமில்லாமல் கூறலாம். (கடவுளை தவிர) காரணம் அதன் முக்கியத்துவம் நாம் அனைவரும் அறிந்ததே,

ஆனால் இச்சூரியன் அழியப் போகின்றது என கூறினால் நம்பமுடிகின்றதா?

ஆம் இந்த சூரியனின் அளவும் வெப்பமும் கூடிகொண்டே போகின்றது. இதனால் சூரியன் ஓர் சிவப்பு அரக்கனாக மாறும்.

இவ்விளைவினால் முதலாவதாக உலக வெப்பமாயமாதல் கூடி தாவரங்கள் அழியும். மேலும் தாவரத்தை உணவாக உட்கொள்ளும் விலங்குகள் இறப்பதோடு மட்டுமல்லாமல் பிராண வாயு அதாவது “ஓட்சிசனும்” தடைப்படும்.

மேலும் இதன் பின் மனிதர்கள் அனைவருமே இறந்துவிடுவர் என்பதிலும் எவ்விதமான சந்தேகமும் இல்லை ஆனால் இது அனைத்தும் கட்டாயம் நிகழும் என்பதையும் யாரும் மறுக்கமுடியாது.

இதற்கான ஒரே வழி நாம் இவ்வுலகை விட்டுவிட்டு வேறு ஓரு வேற்றுகிரகத்தை தேடிச்செல்வது தான்.

இறுதியாக ஓரே ஓரு சுவாரசியமான விடயத்தை கூறிக் கொள்கின்றேன். இவ் அனைத்தும் நிகழ இன்னும் 500 கோடி வருடங்கள் உண்டு என்பதை ஆராய்ச்சியாளர்கள் தமது ஆய்வின் மூலம் வெளியிட்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv