உலகின் மிகச்சிறிய குழந்தை! விரலளவு கால்களை கொண்ட பெண் குழந்தை ஜேர்மனியில்,,,,,,


ஜேர்மனியில் உரிய காலத்திற்கு முன் பிறந்து விரலளவு கால்களை கொண்ட பெண் குழந்தை உலகின் மிகச்சிறிய குழந்தை என்ற பெருமையை பெற்றுள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு ,லூகாஸ் - சபீன் என்ற தம்பதிக்கு எமிலா என்ற குழந்தை பிறந்தது.

இந்த குழந்தை 26 வாரத்தில் தாயின் கருவறையிலிருந்து சிசேரியன் முறையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு எடுக்கப்பட்டது.

எமிலா என்ற இந்த குழந்தை 22 செ,மீ நிளமும் , 299கிராம் எடையுடன் பிறந்தது. இதனுடைய கால்பகுதியானது மனிதனின் விரலளவுக்குதான் உள்ளது. இந்த குழந்தையின் கால்பகுதி வெறும் 3செ,மீ ஆகும்.

குறை பிரசவத்தில் இந்த குழந்தை பிறந்தது தான் குழந்தையின் இந்த நிலைக்கு காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த குழந்தைக்கு கவலையளிக்க கூடிய எந்த நோய்யும் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

கடந்த ஒன்பது மாதம் அளிக்கப்பட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு பின்னர் தற்போது எமிலா என்ற அந்த குழந்தை 3கி.கி எடையுடன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv