மனிதர்களுக்கு காணப்படும் அதித சக்திகள்.....


நாம் ஒவ்வொரு முறையும் “சூப்பர் பவர்களை” பற்றி கேள்விபடும் போது இந்த சக்தி நமக்கு இருந்தால் எப்படி இருக்கும் என எண்ணுவதுண்டு.ஆனால் அவ்வாறான சக்திகள் நம் வாழ்வில் அவ்வப்போது வந்து போவது ஆச்சிரியமான விடயம் தான்.

நம்மில் ஒவ்வொருவரும் கட்டாயம் சில சந்தர்ப்பங்களில் இந்த ஆழ்மனதில் ஏற்படும் அற்புத சக்தியை உணர்ந்திருப்போம்.

நாம் ஒருவரைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கும் சந்தர்பத்திலேயே அவர் நேரில் வருவதை கண்டிருக்கலாம் அல்லது அவரிடமிருந்து phone call வந்திருக்கலாம். ஒருவரிடம் ஒன்று சொல்லவேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கும் அதேவேளையில் அவரே அந்தப் பேச்சை நம்மிடம் எடுத்திருக்கலாம்.

Phone call வந்தவுடன் இவராகத்தான் இருக்கும் என எண்ணி receiver ஐ எடுத்தால் நாம் நினைத்த நபரே சில நேரங்களில் தொடர்புகொள்ள வாய்புகள் உண்டு.

இவ்வாறான செயற்பாடுகளை நாம் மிக பெரிதாக ஏற்பதில்லை,ஆனால் உண்மையில் அவை ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள் என்பது நம்மில் எத்தனைபேருக்கு தெரியும்?

அவ்வாறான சில சக்திகளை பற்றி பார்க்கலாம்

Telepathy

ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்திகளை அனுப்பும் முறையாகும். இது ஆழ்மன ஆராய்ச்சி வகையில் சேர்க்கப்படுகிறது. மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தியை இயல்பாகவே காணலாம். தாய்-குழந்தை, கணவன்-மனைவி, நெருங்கிய நண்பர்களிடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருப்பதை நம்மால் காணமுடியும். வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் கூட சில மனிதர்களுக்கு இந்த சக்தி காணப்படும்.

Psycho kinesis

இது வெளிப்பொருட்கள் மீது இருக்கும் கட்டுப்பாடு, அதாவது நாம் பார்வையிடும் பொருட்களை பார்வையிலே நகர்த்துவது, அசைப்பது போன்றன. அதிகமான ஆங்கில திரைபடங்களில் இதனை கற்பனைகாட்ச்சியாக பார்த்திருக்ககூடும் ரஷ்யாவில் வசித்த “நினாகுலாகினா” என்ற பெண்மணிக்கு இச்சக்தி காணப்பட்டது.


Claivoyance or Remote viewing

இது வெகுதொலைவில் உள்ளதை காணக்கூடிய சக்தி ஆகும். ஆவிகள் பேய்களுடன் பேசமுடிவதையும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இந்தவகையிலேயே உள்ளடக்குகின்றார்கள்.இதனை பெறும்பாலானோர் தெய்வீக சக்தி என்றே கூறுகின்றனர்.


Extra sensory Perception (ESP)

நம் ஐம்புலன்களின் துணையில்லாமல் தகவல்களை அறியமுடிவது ஆகும்.உதாரணமாக; Cards ஐ வைத்து நிறைய மாயாஜால வித்தைகளை இந்த முறையில் பார்த்திருக்ககூடும். ஒருவர் எடுத்த card எது என்பதை சொல்ல முடிவது.


Psychometry

ஒரு திண்மத்தை அதாவது பொருளை வைத்து அது சம்பந்தப்பட்ட விடயங்களையும் மனிதர்களையும் அறியமுடிவதாகும். இதற்கு உதாரணமாக Petter heerkoes என்ற டச்சுக்காரரை சொல்லலாம். இவர் 1943ல் கீழே விழுந்து மண்டை உடைந்த விபத்தில் இந்தச் சக்தியை எதேச்சையாகப் பெற்றார் என கூறபடுகின்றது. இவர் கொலை, கொள்ளை நடந்த இடங்களில் கிடைக்கும் தடயப் பொருட்களினைக் கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் திறமையானவராக காணப்பட்டார்.


Post cognition

என்ன நடந்தது என்பதை நடந்த பின்னர் அறிய முடிந்த சக்தியாகும். சில வெளிநாடுகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆழ்மன சக்தியாளர்களின் இச்சக்தியைக் காவல்துறை அதிகாரிகள் இரகசியமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

Pre cognition

இது நடப்பதை முன்கூட்டியே அறியும் சக்தியாகும். உதாரணமாக Chrittus என்ற ஞானி பல விபத்துக்களை நடப்பதற்கு முன்கூட்டியே சொன்னார்.

Astrol projection or out of Body experience (OBE)

உடலை விட்டு வெளியேறி பலவற்றையும் காணும் சக்தியாகும். இந்தசக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள். இது குறித்து Dr. Charls dard ஆராய்ச்சி செய்திருக்கிறார். 1967ல் அவர் செய்த ஒரு ஆராய்ச்சியில் படுத்த நிலையில் உள்ள ஒரு ஆழ்மன சக்தியாளர் அடுத்த அறையில் தரையில் எழுதிவைக்கப்பட்டிருந்த 5 இலக்க எண் என்ன என்பதை சரியாகச் சொன்னதாகத் கூறபடுகின்றது.


Psychic Healing or Spiritual Healing

இது மருந்துக்களின் உதவியின்றி நோய்களைக் குணப்படுத்தும் சக்தி ஆகும். இந்த குணப்படுத்தும் சக்தியைப் பலர் ஆழ்மன சக்திவகையில் சேர்ப்பதில்லை. இதனையும் தெய்வீக சக்தி அல்லது மாற்று சிகிச்சை சக்தி வகைகளிலே சேர்க்கின்றனர்.ஆனாலும் இது ஆழ்மன சக்திகளில் சேர்ப்பது மிகப் பொருத்தமானது.

ஆழ்மன சக்திகள் முழுவதையும் இந்த 9 வகைகளில் அடக்கிவிட முடியாது என்றாலும் இதனை அடிபடையாக கூறலாம். இனி அவ்வப்போது இவ்வாறான சக்திகள் வந்தால் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் நண்பர்கள

1 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv