விடாமுயற்சி... விஸ்வரூப வெற்றி: பிறந்தது பெண் குழந்தை.....


பிரேசில் நாட்டை சேர்ந்த தம்பதியினர் தங்களுக்கு பெண் குழந்தை வேண்டுமென ஆசைப்பட்டு 20 வருடங்கள் கழித்து அதற்காக பலனை பெற்றுள்ளனர்.

ஆசிய நாடான இந்தியாவில் பெண் குழந்தை பிறந்தாளே, அது குடும்பத்திற்கு பாரம் என நினைத்து அதனை கொலை செய்துவிடும் நிலை தற்போது வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உலகத்தில் வாழும் இப்படிப்பட்ட மக்களுக்கு மத்தியில் பிரேசிலை சேர்ந்த Irineu Cruz- Jucicleide Silva தம்பதியினர் தங்களுக்கு பெண் குழந்தை வேண்டும் என தவமாய் தவமிருந்துள்ளனர்.

ஆனால் இவர்களுக்கு வரிசையாக ஆண் குழந்தையே பிறந்துள்ளது, இருந்தபோதிலும் தங்களது முயற்சியை கைவிடாத இவர்களுக்கு 13 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.

இந்நிலையில் 20 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையில், இவர்களுக்கு பலன் கிடைத்துள்ளது. 14 ஆவதாக பெண் குழந்தையை Jucicleide Silva பெற்றெடுத்துள்ளார்.

இத்தம்பதியினர் தாங்கள் பெற்றெடுத்த 13 ஆண் குழந்தைகளுக்கும், கால்பந்து துறையில் உலகின் முன்னணி வீரர்களாக இருப்பவர்களின் பெயரையே வைத்துள்ளனர்.

சொல்லப்போனால், பெண் குழந்தைக்கு ஆசைப்பட்ட இவர்கள், ஒரு கால்பந்து அணியையே உருவாக்கியுள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv