500 கோடிக்கும் அதிக வருமானத்தை பெற்றுள்ள அர்ஜுன் மகேந்திரனின் மருமகன்.....


இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் மருமகன் 5000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக வருமானத்தை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் நாட்டின் மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாகியிருந்த இலங்கை மத்திய வங்கி பிணை முறி விற்பனையின் மூலம், Perptual நிறுவனம் 5000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக வருமானத்தை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனம் முன்னாள் மத்திய வங்கிய ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் மருமகன் அர்ஜுன எலோசியஸிற்கு சொந்தமானதென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொடுக்கல் வாங்கல் அப்போதைய மத்திய வங்கி ஆளுநராக இருந்த அர்ஜுன் மகேந்திரனினால் சில மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் நாடாளுமன்ற கோப் குழுவினால் விசாரணை மேற்கொண்டு எதிர்வரும் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த கொடுக்கல் வாங்கல்களில் Perptual நிறுவனத்திற்கு 675 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாகவும், அரசாங்கத்திற்கு 900 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv