298 பேருடன் வெடித்து சிதறிய மலேசியா விமானம்: ரஷியா தான் காரணம்?


298 பேருடன் வெடித்து சிதறிய மலேசியாவின் எம்எச் 17 விமானம், ரஷியன் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என சர்வதேச விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2014 ஜூலை மாதம் 17ம் திகதி ஆம்ஸ்மாடாமிலிருந்து கோலாலம்பூருக்கு பயணித்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமான எம்.எச்.17 பயணிகள் விமானம் ரஷியா எல்லைப் பகுதி அருகே உக்ரைனில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் 15 விமான ஊழியர்கள் உட்பட பயணம் செய்த 298 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.

இந்த விபத்து குறித்து நெதர்லாந்து தலைமையிலான சர்வதேச விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விசாரணை அதிகாரிகள் கூறியதாவது, எம்.எச்.17 விமானமானது ரஷியாவின் பக் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

ஏவுகணையானது ரஷிய பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டு உள்ளது, தாக்குதலுக்கு பின்னர் ரஷியாவிற்கே கொண்டு செல்லப்பட்டு விட்டது என்று விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ராடர் கருவி மூலம் எங்களுக்கு ஒரு துப்பு கிடைத்துள்ளது. அதன் மூலம் சீக்கிரம் உண்மை தெரிய வரும். தடவியல் நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என பொலிசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, விமானத்தை ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகள் தான் சுட்டு வீழ்த்தினர் என குற்றம் சாட்டபட்டது அதற்கு ஆதாரபூர்வமான சான்றும் கிடைத்தது. ஆனால் அதற்கு பதிலாக ரஷியா மேற்கத்திய நாடுகளை குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv