மட்டக்களப்பில் 200க்கும் மேற்பட்ட யுத்த வீரர்கள்! நிசாந்த கமலசிறி....


மட்டக்களப்பு மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட யுத்த வீரர்களின் குடும்பங்கள் உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரணவிரு சேவை அதிகார சபையின் கிழக்கு மாகாணத்திற்கான பிரதி ஆணையாளர் நிசாந்த கமலசிறி தெரிவித்தார்.

ரணவிரு சேவை அதிகார சபையின் கீழ் மாவட்ட ரீதியில் உள்ள ரணவிரு உறுப்பினர்களை இணைத்து புதிய ரணவிரு குழுக்கள் அமைக்கும் பணிகள் இலங்கையின் பல மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள யுத்த வீரர்களின் குடும்பங்களை ஒன்றிணைத்து மாவட்ட ரணவிரு சங்கம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் மாவட்ட ரணவிரு சங்கம் அமைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அகில இலங்கை ரணவிரு அதிகார சபையின் உபதவிசாளர் விபுலாங்கனி மாலேகமுகவின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் தினேஸ் கருணாநாயக்க, கல்லடி 231படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் அனுர துணுதிலக உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ரணவிரு சேவை அதிகாரசபையின் மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் மாவட்ட அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் இதுவரை காலமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் அமைக்கப்படவில்லை. ரணவிரு சேவை அதிகார சபை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட யுத்த வீரர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv