ஒரு மணி நேரம் வேலை செய்தால் 2,000 ரூபாய் சம்பளம்: அரசு அதிரடி அறிவிப்பு....


கனடா நாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கனடாவில் உள்ள அல்பேர்ட்டா மாகாண அரசு தான் இந்த அதிரடி உத்தரவை பிறபித்துள்ளது.

தொழிலாளர் துறை அமைச்சரான கிறிஸ்டினா க்ரே இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்தாண்டு அளித்த உறுதிமொழிகளை தற்போது நிறைவேற்றி வருவதாகவும், அவற்றில் ஒரு திட்டமான ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை மணிக்கு 15 டொலராக(2,179 இலங்கை ரூபாய்) அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கிறிஸ்டினா க்ரே தெரிவித்துள்ளார்.

இதன் முதல் கட்டமாக, அடுத்த மாதம் முதல் மணிக்கு 12.20 டொலரும், அடுத்தாண்டு அக்டோபர் மாதம் முதல் மணிக்கு 13.60 டொலரும், எதிர்வரும் 2018ம் ஆண்டு அக்டோபர் முதல் மணிக்கு குறைந்தபட்ச ஊதியமாக 15 டொலர் வழங்கப்படும்.

இந்த திட்டம் மூலம் கனடா நாட்டில் உள்ள மாகாணங்களில் அல்பேர்ட்டா மாகாணத்தில் தான் அதிகமான குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv