103 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பன் பாலம் - கடலுக்கு அடியில் கர்டர்கள் பொருத்தும் பணி தீவிரம்....


இந்தியா - பாம்பன் இரயில் பாலத்தில் புதிய இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1913ஆம் ஆண்டு இறுதியில் 5 ஆயிரம் டொன் சீமெந்து 18 ஆயிரம் டொன் இரும்பு, இத்துடன் 18 ஆயிரம் டொன் ஜல்லி கற்களைக் கொண்டு இரசாயன கலவையின்றி 146 தூண்களை அமைத்தும், 270 அடி நீளமும், 100 டொன் எடை கொண்ட தூக்கு பாலத்தையும் உள்ளடக்கி பாம்பன் இரயில் பாலத்தின் பணிகள் நிறைவடைந்தது.

இத்தகைய சிறப்பு வாயந்த பாலத்தில் உப்புக்காற்றால் துருப்பிடித்து தண்டவாளம் மற்றும் அதனை தாங்கி நிற்கும் கர்டர்கள் சேதமடைந்துள்ளது.

இதனையடுத்து இந்திய இரயில்வே பாலம் பராமரிப்புத்துறை மற்றும் பொறியியலாளர்கள் குழுவினர், சேதமடைந்த இரும்பு கர்டர்களுக்கு பதிலாக கடந்த ஆண்டு 13 கர்டர்கள் புதியதாக மாற்றி அமைத்திருந்தது.

இந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக ஆறு கோடி மதிப்பீட்டில் அரக்கோணத்தில் செயல்பட்டுவரும் இந்திய இரயில்வே துறைக்கு சொந்தமான நிறுவனத்தில் தயார் செய்யப்பட்ட துருப்பிடிக்காத 16 இரும்பு கர்டர்களை பொருத்தும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

இப்பணியின் போது இரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் பணி நடைபெற்று வருவதாக இரயில்வே துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், நடுக்கடலின் அடியில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வருவதை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv