உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் திறப்பு!


சீனாவின் ஹூனன் மாகாணத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான மற்றும் நீளமான கண்ணாடி பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூனன் மாகாணத்தில் உலகின் மிக உயரமானதும், நீளமானதுமான கண்ணாடி பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

இந்த பாலமானது சுமார் 1,410 அடி(430 மீற்றர்) நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. ஹூனன் மாகாணத்தில் உள்ள ஜங்ஜியஜியி கேன்யான் என்ற பகுதியில் தரையில் இருந்து 300 அடி உயரத்தில் இந்த பாலம் உள்ளது.

இந்த பாலம் தியான்மென் மலையின் தேசிய பூங்காவில் உள்ள இரண்டு குன்றுகளுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது.


3.4 மில்லியன் டொலர் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 6 மீற்றர் அகலத்தில் பாலத்தின் நடுவே பொதுமக்கள் கடந்து செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஹாய்ம் டோடன் என்ற வடிவமைப்பாளர் இதனை வடிவமைத்துள்ளார்.

இந்த பாலத்தை கண்டுகளிக்க தினந்தோறும் 800 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் இந்த கண்ணாடி பாலத்தில் பல்வேறு பாதுகாப்பு சோதனை செய்யப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

சீனாவின் மிக முக்கிய பகுதிகளில் இதுபோன்ற கண்ணாடி பாலங்களை எழுப்பி சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது சீனா அரசு.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv