உலகிலேயே மிகப்பெரிய சைக்கிள் ஜேர்மனியரால் உருவாக்கம்!


உலகிலேயே மிகப்பெரிய சைக்கிள் ஒன்று ஜேர்மனி நாட்டவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை 49 வயதான பிரேங் டோஸ் என்பவர் உருவாக்கியுள்ளார்.

இந்த சைக்கிளின் நிறை 940 கிலோகிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கிய பிரேங் டோஸ் 500 யார் தூரத்திற்கு இதனை செலுத்திச் சென்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இதற்கு முதல் உலகில் மிகப்பெரிய சைக்கிளாக 860 கிலோ நிறையுடைய சைக்கிலே பெயர் பதித்திருந்தது. அந்த சைக்கிளை உருவாக்கியவர் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஜெப் பீட்டர்ஸ் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv