தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்த உசேன் போல்ட்....


பெரிதும் எதிர்பாக்கப்பட்ட ஆண்கள் 100மீற்றர் ஓட்டத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட் 9.81 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார்.

ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்டத்தில் தொடர்ந்து 3 முறை தங்கம் வென்று போல்ட் ‛ஹாட்ரிக்' சாதனை புரிந்தார்.

ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 7 தங்கப் பதக்கங்களை உசேன் போல்ட் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் (9.89 வினாடிகள்) வெள்ளியும், கனடாவின் ஆன்ட்ரே டி கிரேஸ்(9.91 வினாடிகள்) வெண்கலமும் வென்றனர். மற்றொரு ஜமைக்கா வீரர் யோகன் பிளேக்கிற்கு 4வது இடமே கிடைத்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv