பதக்கங்களை கடிப்பது ஏன் தெரியுமா? (படங்கள் இணைப்பு)


ஒலிம்பிக் போட்டிகளில் தங்களுக்கு கிடைத்த பதக்கங்களை வாயில் வைத்து கடிப்பது போன்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதை நம்மில் பலரும் அவதானித்துள்ளோம்.

தற்போது இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் மட்டுமல்ல ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த வழக்கம் இருக்கத்தான் செய்கின்றது.

பதக்கங்களை கடிப்பதற்கான பதிலை பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இதற்கான பதில்  தற்போது வெளிவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் தலைவராக இருந்த டேவிட் வெலனஷ்கி கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளில் இவ்வாறு பதக்கங்களை கடிப்பது வழக்கமாக மேற்கொள்ளபடுகின்றது.

இதற்காக ஒலிம்பிக் கட்டுபாடோ, சட்டமோ விதிக்கவில்லை.

ஒருவகையில் புகைப்படவியலாளர்கள் தங்கள் புகைப்படங்கள் சிறப்பாக இருக்க வேண்டும், புகைப்படத்தினை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என தற்காலத்தில் இந் நடைமுறையை பின்பற்றினாலும், இதற்கு ஒரு உண்மை பிண்ணனி உண்டு.

ஆரம்ப காலத்தில் உண்மையான தங்கப்பதக்கமா? அல்லது கலப்படமிக்க தங்கப்பதக்கமா? என்பதை கண்டறிவதற்காகவே பதக்கங்களை கடித்தனர். உண்மையான தங்கப்பதக்கத்தை கடிக்கும்போது பல்லில் ஒருவித உள்ளீர்ப்பு விசை உணர்வு ஏற்படுவதாக உணர்ந்தனர். இந்த உண்மை இன்று மறக்கப்பட்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதற்கு பயன்படுவதாக அனைவரும் கருதுகின்றனர்.

இதனை பின்பற்றியே தற்போது வரை  ஒலிம்பிக் சம்பிரதாயமாக வீர, வீராங்கனைகள் பதக்கங்களை கடிப்பது போன்று போஸ் கொடுத்து வருகின்றனர்.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv