கின்னஸ் சாதனை படைத்த இளம் பெண்.....


இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 31 மணிநேரம் தொடர்ந்து டிரம்ஸ் வாசித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

மத்தியபிரதேசத்தின் இண்டோர் மாநிலத்தை சேர்ந்தவர் சிரிஷ்டிபடிடார்(24). இவர் கடந்த திங்கள்கிழமை மதியம் 12.30 மணியில் இருந்து தொடர்ந்து செவ்வாய்கிழமை இரவு 8 மணிவரை டிரம்ஸ் வாசித்துள்ளார். இதற்கிடையில் இவர் மூன்று முறை மட்டும் இடைவேளை எடுத்துக்கொண்டார் என கூறப்படுகிறது.
இதன் மூலம் இவர் தொடர்ந்து 31 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் மெக்சிகோ நாட்டை சேர்ந்த சோபியா 24 மணி நேரம் தொடர்ந்து டிரம்ஸ் வாசித்தது கின்னஸ் சாதனையாக இருந்தது.

அவரது பயிற்சியாளர் பப்லு சர்மா கூறியதாவது, சிரிஷ்டிபடிடார் கடுமையான பயிற்சி மேற்கொண்டார். கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து பயிற்சி செய்து வந்தார், மேலும் இச்சாதனையை கண்டு தான் மிகவும் பெருமை அடைவதாக தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv