கருப்பை புற்றுநோயை கண்டறியும் புரத முலக்கூறு.....


ஆய்வாளர்கள் கருப்பை புற்றுநோயை அதன் தொடக்க நிலையிலேயே கண்டறிய உதவும் புரதத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இக் கருப்பை புற்றுநோயானது பெண்ணின் முட்டையை பிறப்பிக்கும் அங்கமான சூலகத்தில் ஆரம்பிக்கின்றது.

இதை அடையாளப்படுத்துவது இலகுவானதல்ல, ஏனெனில் இது வயிற்றுப் பகுதியில் மறைந்து வளர்ச்சியடைகிறது.

இதை ஆரம்ப கட்டத்தில் அடையாளப்படுத்துவதால் கீமோதெரபி மூலம் குணப்படுத்திவிட முடியும். ஆனால் கீமோதெரபி மூலம் குணப்படுத்த முடியாத நிலையை அடைந்தால் இறப்புக்களை தோற்றுவிக்கக் கூடியது என ஆய்வாளர்கள் சொல்கின்றார்கள்.

இவை நோய்த் தாக்கம் ஏற்பட்டு 3 வருடங்கள் வரையில் இனங்காணப்பட முடியாதது.

ஆனால் தற்போதைய ஆய்வொன்று, கருப்பை புற்றுநோயுள்ளவர்களுக்கு SOX2 எனப்படும் புரதம் அதிகளவில் இருப்பதை கண்டறிந்துள்ளது.

ஆகையால் இதன் அளவை தெரிந்து கொள்வதன் மூலம், ஆரம்பத்திலேயே இப்புற்றுநோயை இனங்கண்டு குணப்படுத்திவிடலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv