கனடாவில் முதல் சர்வதேச தமிழர் தடகள விளையாட்டு போட்டி,,,,


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது சர்வதேச தடகள விளையாட்டு போட்டி விமர்சியாக நடைபெற உள்ளது.

உலகம் எங்கும் வாழும் ஈழத்தமிழர்கள், தங்கள் கனவை நிறைவேற்ற பல இடங்களில் முயன்று வருகின்றனர். அவ்வாறு நடைபெறுமானால் அவர்களின் குழந்தைகள், இளைஞர்கள் மனதில் தன்னம்பிக்கை உண்டாக்கும்.

அதற்கு அனைத்து அங்கத்தவரையும் வேறுபாடின்றி ஒன்றாக இணைக்க அடையாளமாக அமைவது விளையாட்டு மட்டும் தான் என்பதில் மாற்றமில்லை.

இதை ஒரு அடித்தளமாக கொண்டு எம்மினத்தவர்கள் எல்லோரையும் இணைக்கும் வகையில், பொது விளையாட்டு போட்டி ஒன்றை சர்வதேச ரீதியில் நாடு கடந்த தமிழக அரசாங்கம் ஒழுங்கு செய்துள்ளது.

இதில் முதலாவது சர்வதேச தமிழர் தடகள விளையாட்டு போட்டி கனடாவில் உள்ள டொரோண்டாவின் Birchmount மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஒரு கூட்டு அடையாளத்தை கட்டியெழுப்ப உதவும் பொருட்டு, உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் இவ்வகையான விளையாட்டு போட்டிகள் ஏனையநாடுகளில் நடத்தப்படுவதாகவும், குறிப்பாக வட அமெரிக்காவின் நியூயோர்க்கில் பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது எனப்து குறிப்பிடத்தக்கது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv