உலகளவில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தது இவரா?


அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் ஐ.டி துறையில் முதல் 100 இடங்களில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 7800 கோடி டொலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், அதற்கு அடுத்த படியாக அமேசான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதன் செயல் அதிகாரியான ஜெப் பிசோஸ் 6620 கோடி டொலர் சொத்துக்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளார்.

மூன்றாவது இடத்தில் சமூகவலைதளமான பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கும், நான்காவது இடத்தில் ஆரக்கிள் நிறுவன தலைவர் லாரி எல்லிசன்னும் உள்ளனர்

எட்டாவது இடத்தில் சீனா அலிபாபாதலைவர் ஜேக் மோ 2580 கோடி டொலர் சொத்துக்களுடன் உள்ளார்.

இந்தியாவின் விப்ரோ தலைவரான அசிம் பிரேம் ஜி 1600 கோடி டொலர் சொத்துகளுடன் 13 வது இடத்திலும், எச்.சி.எல் நிறுவன தலைவர் ஷிவ் நாடார் 1160 கோடி சொத்துக்களுடன் 17 வது இடத்தில் உள்ளனர்.

அமெரிக்கா வாழ் இந்தியரான சிம்பொனி டெக்னாலஜி செயல் அதிகாரி ரொமெஷ் வாத்வானி மற்றும் சிண்டெல் நிறுவனத்தலைவர் பாரத்தேசாய், அவரது மனைவி நீரஜாவும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்த 100 கோடிஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 89200 கோடி டாலர் என்றும் இது சென்ற ஆண்டை விட 6 சதவீதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது

இந்த பட்டியலில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv