தசை நார்களின் களைப்பை உணரும் உயிரியல் உணரி.....


தசை நார்களில் உண்டாகும் களைப்பை உணர, நீரிழப்பு மற்றும் மன அழுத்தங்களை கண்டறியும் உயிரியல் உணரியொன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த உணரியானது அணியக் கூடியதும், நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மனித உடலானது தொடர்ச்சியான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது சில பகுதிகளில் காற்றுக்குரிய சுவாசம் தடைப்பட்டு, காற்று இன்றியே சுவாசம் நிகழ ஆரம்பிக்கின்றது.

அக்கட்டத்தில் lactate ஆனது அது உள்ளெடுக்கப்படுவதிலும் பார்க்க அதிகளவில் தொகுக்கப்படுகிறது.

இதன் மட்டத்தை அறிவதன் மூலம் தசைநார்களின் தன்மையை, நீரழப்பின் அளவை மற்றும் மன அழுத்தங்களை அறிந்துகொள்ள முடியும் என சொல்லப்படுகிறது.

மேற்படி குழு, New Mexico பல்லகலைக்கழகத்துடன் இணைந்து நொதியத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிற்படும் உணரியை உருவாக்கியுள்ளனர்.

இவ்வுணரி மிக வினைத்திறனாக செயற்படுவதாக ஆய்வாளர் Ulyanova சொல்கிறார்.

இங்கு நொதியமானது, குளுக்கோஸை உடைத்து சக்தியை வெளியேற்றுகிறது.

இச்சக்தியானது மின் கதோட்டுகளால் உபயோகிக்கப்பட்டு அது lactate இன் அளவை துணிய ஏதுவாகின்றது,Solid State Science and Technology எனும் பக்கத்தில் இந்த ஆய்வு பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv