ராஜஸ்தானில் இருக்கும் தங்கம் எத்தனை டன் தெரியுமா?


இந்தியாவின், தங்கம் வளம் மிகுந்த பகுதியில் ராஜஸ்தான் முதலிடம் வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கம் வளம் குறித்து ராஜஸ்தான், பீஹார், உத்திர பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், கேரளா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் மொத்தம் 98 லட்சம் டன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் வளம் அதிகமாக உள்ள மாநிலங்களில் 68 லட்சம் டன் தங்கம் உள்ள ராஜஸ்தான் முதலிடத்திலும், ஜார்கண்ட் 20 லட்சம் டன்னுடன் இரண்டாவது இடத்திலும், 10 லட்சம் டன் கொண்ட கர்நாடக மூன்றாவது இடத்தில் உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பாக்சைட் வளம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகம் உள்ளதால், மத்திய அரசு அனுமதி கிடைத்த பின்னர் MLC நிறுவனம் பாக்சைட் வெட்டியெடுக்கும் உரிமையை பெறும் என மத்திய சுரங்கத்துறை அமைச்சர் பியுஷ் கோயால் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv