கீழே கிடந்த ரூ.84,000 பணம்: நேர்மையை பாராட்டிய தொழிலதிபர் ஜாக்பாட்


தாய்லாந்து நாட்டில் தொழிலதிபர் ஒருவர் தனது பர்ஸை தவற விட்டதை தொடர்ந்து அதனை கண்டுபிடித்து நேர்மையாக திருப்பி ஒப்படைத்த நபருக்கு புதிய வாழ்க்கை தொடங்கியுள்ளது.

தாய்லாந்து நாட்டில் Woralop(45) என்ற நபர் வீடு மற்றும் வேலை எதுவும் இல்லாத காரணத்தினால் தெருக்களில் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் தொழிலதிபர் ஒருவர் அவர் தங்கியுள்ள தெரு வழியாக கடந்து சென்றபோது அவரது பர்ஸை தவறவிட்டு சென்றுள்ளார்.

இதனை தூரத்தில் இருந்து கவனித்த இந்த ஏழை நபர் உடனடியாக பர்ஸை கண்டுபிடித்து எடுத்து தொழிலதிபரை தேடியுள்ளார்.

ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் அந்த பர்ஸை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். நபரின் நேர்மையை கண்டு வியந்த பொலிசார் அவரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

ஆனால், 440 பவுண்ட்(84,161 இலங்கை ரூபாய்) அடங்கிய அந்த பர்ஸ் உரிய தொழிலதிபரிடம் சென்றடைந்தபோது அவர் மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்று அதனை கண்டுபிடித்த நபரை நேரில் சந்திக்க விரும்பியுள்ளார்.

நபரை சந்தித்தபோது அவருக்கு வீடு மற்றும் வேலையும் இல்லை என்பதை தொழிலதிபர் அறிந்தார்.


நபரின் நேர்மையை பாராட்டிய தொழிலதிபர் அவருக்கு தனது தொழிற்சாலையில் ஒரு நல்ல வேலை மற்றும் அங்கேயே தங்குவதற்கு ஒரு வீட்டையும் அளித்து கெளரவித்துள்ளார்.

ஏழ்மையில் தவித்த அந்த நபர் தற்போது மாதம் 240 பவுண்ட்(45,906 இலங்கை ரூபாய்) ஊதியம் பெற்று வருகிறார்.

நபரின் நேர்மையை பாராட்டிய தொழிலதிபரின் மனைவி அவருடன் ஒரு புகைப்படம் எடுத்த் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு பிரபலப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv