400 மீ. ஓட்டத்தில் திருப்பம்: கடைசி நேரத்தில் டைவ் அடித்து தங்கம் வென்ற பஹாமாஸ் வீராங்கனை....


ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டத்தில் பஹாமாஸ் வீராங்கனை ஷவ்னே கடைசி நேரத்தில் டைவ் அடித்து விழுந்து இலக்கை கடந்தது தங்கம் வென்றார். அத்துடன் உலக சாம்பியனான அமெரிக்க வீராங்கனை அலசன் பெலிசுக்கு அதிர்ச்சி அளித்தார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 400 தொடர் ஓட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உலக சாம்பியனான அமெரிக்க வீராங்கனை அலசன் பெலிசுக்கும், பஹாமாஸ் வீராங்கனை ஷவ்னே இடையே கடும் போட்டி நிலவியது. இலக்கை நெருங்கும் போது ஷவ்னே மில்லர் தலையை முன்பக்கமாக நீட்ட முயற்சித்த போது நிலை தடுமாறினார். உடனடியாக சுதாரித்த அவர், திடீரென டைவ் அடித்து பாய்ந்து சென்று இலக்கை அடைந்தார். இதனை கண்ட சகவீராங்கனைகள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஷவ்னே 49.44 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். அலிசன் பெலிக்ஸ 49.51 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளி பதக்கமும், ஜமைக்காவின் ஷெரிக்கா ஜாக்சன் 49.85 வினாடிகளில் 3வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv