4 மாத குழந்தையை அடித்தே கொன்ற கொடூர தந்தை: அதிர்ச்சி தரும் கொலைக்கான காரணம்?


அமெரிக்காவில், தந்தை ஒருவர் தனது நான்கு மாத பெண் குழந்தையை கையால் 22 முறை குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி பார்க்க விடாமல் சத்தம் போட்டுக் கொண்டிருந்ததால் தான் குழந்தையை அடித்து கொன்றேன் என கைதான தந்தை வாக்கு மூலம் அளித்துள்ளது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து பொலிசார் அளித்துள்ள தகவலில், சம்பவம் நடந்த தினத்தன்று 21 வயதான கோரி மோரிஸ் என்ற அந்த கொடூர தந்தை ,Minneapolis பகுதியில் உள்ள அவரது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவரது, நான்கு மாத பெண் குழந்தை எமர்சின், சத்தம் போட்டுக்கொண்டிருந்துள்ளது. குழந்தையின் சத்தம் தொலைக்காட்சி பார்ப்பதற்கு இடையூறாக இருந்ததால் கோபமடைந்த அவர்,குழந்தையின் நெஞ்சில் தனது கையால் 7 முறையும், முகத்தில் 15 முறையும் குத்தியுள்ளான். இதனால் அந்த பச்சிளம் குழந்தை மயக்கமடைந்துள்ளது.

பின்னர் கோபம் தணிந்த மோரிஸ், பொலிசாருக்கு போன் செய்து தன் குழந்தையை கொன்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், மயக்க நிலையில் இருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் குழந்தையை சோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

கோரி மோரிஸின் மனைவி கூறியதாவது, மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போதே, சில விநாடிகளில் கோபமடையக்கூடிய மாதிரியான மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறியுள்ளார். குடும்பத்தினரும் மோரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் கைது செய்யப்பட்டுள்ள மோரிஸ் தற்போது the Hennepin County சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பிணையில் விடுதலை செய்ய 2 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv