சுமார் ரூ.30 கோடி அபராதம்? மீன் இறைச்சியை பரிமாரிய உணவகம் .....


செக் குடியரசு நாட்டில் உணவகம் ஒன்று மீன் இறைச்சியை வாடிக்கையாளர்களுக்கு பரிமாரிய குற்றத்திற்கு அந்த உணவகம் மீது ரூ.30 கோடி அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய ஐரோப்பாவில் உள்ள செக் குடியரசு நாட்டின் தலைநகரான Prague நகரில் Vltava என்ற பெயருடைய ஆறு உள்ளது.

இந்த ஆற்றில் உள்ள மீன்களை பிடித்து சமைத்து சாப்பிடலாம். ஆனால், மீன்களை பிடித்து யாருக்கும் விற்பனை செய்ய சட்டப்பூர்வமாக அனுமதி கிடையாது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆற்றில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையில் நபர்கள் மீன் பிடிப்பது உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

மேலும், மீன்களை பிடித்து இதே நகரில் இயங்கி வரும் Haru Sushi Bar என்ற உணவகத்திற்கு விற்பனை செய்வதாகவும், உணவகம் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த மீன்களை சமைத்து பரிமாருவதாகவும் புகார் சென்றுள்ளது.

புகாரை பெற்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் உணவகத்தில் அதிரடி சோதனை ஒன்றை நடத்தியுள்ளனர்.

அப்போது, Vltava ஆற்றில் பிடிக்கப்பட்ட சுமார் 1.2 கிலோ எடையுள்ள மீன்கள் குளிர்சாதனப்பெட்டியில் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

வியாபார நோக்கில் ஆற்றில் மீன்களை பிடித்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாரியதாக அந்த உணவகம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் உணவகத்திற்கு 1.85 மில்லியன் யூரோ(30,16,47,950 இலங்கை ரூபாய்) அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv