கைப்பேசி மூலம் பண பரிவர்த்தனை 21 வங்கிகளில் புதிய வசதி......


நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமான NCPI கைப்பேசி மூலம் சுலபமாக பண பரிவர்த்தனை செய்வதற்காக ‘யூனி­பைடு பேமன்ட்ஸ் இன்­டர்பேஸ் (UBI) என்ற புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி இந்த அப்ளிகேஷனை செயல்படுத்தி பார்த்து இதன் செயல்பாட்டில் திருப்தியடைந்த பின்னர் பொதுமக்கள் இந்த வசதியை வழங்க வேண்டி 21 வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank), பாரதிய மகிளா வங்கி (Bharatiya Mahila Bank), கனரா வங்கி (Canara Bank), ஐ.டி.பி.ஐ., வங்கி (IDBI Bank), ஆர்.பி.எல் (RBL Bank), வங்கி, ஆந்திரா வங்கி (Andhra Bank), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), உள்ளிட்ட, 21 வங்கிகள், ‘UBI’ வசதியை வழங்க உள்ளன.

இது குறித்து, NCPI நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஏ.பி.ஹோடா கூறியதாவது, இந்த UBI அப்ளிகேஷனை பயன்படுத்தி சுலபமாக பணம் அனுப்பவும் பெறவும் முடியும். மேலும், இந்த வசதி வங்கிகள் மூலம், அடுத்த, 2 – 3 நாட்களில் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும், என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv