ஒரு வெள்ளிப்பதக்கம் 12 "கோடி" இரண்டு அரசவேலைவாய்ப்பு- சிந்து!


ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 5-வது இந்திய வீராங்கனை, வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைகளும் சிந்து வசமானது.

இதுதவிர இளம் வயதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையையும் 21 வயதான சிந்து தட்டிச் சென்றுள்ளார்.

சிந்து வெள்ளி வென்றதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா 2-வது பதக்கத்தை பெற்றுள்ளது.

இதன் மூலம் இவருக்கு பரிசு மழை கொட்டுகிறது,

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து பரிசு மற்றும் பாராட்டு மழையில் நனைந்து வரு கிறார். அவருடைய சொந்த மாநிலமான தெலங்கானா சார்பில் அவருக்கு ரூ.5 கோடி மற்றும் அரசு பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ந்திர அரசு ரூ.3 கோடி பரிசுத்தொகையுடன், அரசு வேலையும் பி.வி.சிந்துவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடை பெற்றது. இதில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி கொடுத்த பி.வி சிந்துவுக்கும், அவரது பயிற்சியாளர் கோபிசந்துக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

பி.வி.சிந்து தற்போது ஹைதராபாத் தில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதை தொடர்ந்து அவருக்கு துணை மேலாளர் பதவி உயர்வும், ரூ.75 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும் என பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுத்தொகை விவரம்

தெலங்கானா: ரூ.5 கோடி
ஆந்திரா: ரூ.3 கோடி
டெல்லி: ரூ.2 கோடி
மத்தியப் பிரதேசம்: ரூ.50 லட்சம்
பாரத் பெட்ரோலியம் நிறுவனம்: ரூ.75 லட்சம்
இந்திய பாட்மிண்டன் சங்கம்: ரூ.50 லட்சம்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv