இன்றைய (07-07-2016) கேள்வி பதில்


கேள்வி: - 

என் அன்பிற்குரிய சட்டத்தரணி சுதன் அண்ணா என் பெயர் வினோதினி.நான் உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் படிக்கிறேன்.அண்ணா! மனநோய் உள்ள ஒருத்தரைப் பாத்தவுடனே கண்டுபிடிச்சிடலாமா? வேறு என்ன வழிமுறையில் கண்டுபிடிக்க முடியும்? மனநோய் பற்றிய விளக்கத்தினை தாருங்கள்.

  பதில்: -     

அன்பான மாணவியே! மனநோய் என்பது உடல் சார்ந்தல்ல.அது மனசு (மூளை) சார்ந்தது.அதனால் பார்த்தவுடனே கண்டு கொள்ள முடியாது.சம்பந்தப்பட்டவருடன் பேசிய பின்பே கண்டு பிடிக்க முடியும்.சிலவேளை மனநோய் உள்ளவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் யாருடன் பேச விரும்ப மாட்டார்கள்.தனிமையிலிருப்பார்கள்,நெருங்கி சென்றாலும் விலகிச் செல்வார்கள்.சிரிக்க மாட்டார்கள், அழ மாட்டார்கள்.அழு முயற்சித்தாலும் கண்ணீர் சிந்த மாட்டார்கள், பொதுவாக மனித எண்ணங்கள் அனைத்துமே உடல்மொழியாவும் வாய்மொழியாவும் தான் வெளிப்படுகிறது.இதில் ஒரு பொருத்தமான,தொடர்புடனான,அறிவுபூர்வமான,தொடர்ச்சியான,(Relevance, இணக்கத்தைப், தர்க்கம், தொடர்ச்சி) தொடர் இருக்கணும்.ஆனால் மனநோயுள்ளவர்களுக்கு இதன் தொடர் இருக்காது. அதீதஉணர்ச்சி வெளிப்பாட்டுடன் (மிகைப்படுத்தி) நடவடிக்கைகள், சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத பேச்சு, போன்றவை உடலில் இரசாயண (வேதியல்) மாற்றம் அதிகரிப்பதனால் அல்லது குறைவதனால் இவ் மனநோய் ஏற்படலாம். இதுவரை மொத்தம் 116 விதமான மனநோய்கள் தகவல்கள் (ஆவணங்கள்) வகைப்படுத்தப்பட்டுள்ளன. மனநோய் இரண்டு வகையில் நோக்கப்படுகிறது.1.சைக்கோலஜி (உளவியல்) .2 சைக்கியாட்ரி (மனநல) சைக்கோலஜி (உளவியல்) படித்தவர்களை சைக்கோலஜிஸ்ட் (சைக்காலஜிஸ்ட்) என்றும் சைக்கியார்டி (மனநல) படித்தவர்களை சைக்கார்டிஸ்ட் (உளவியலாளர்) என்றும் அழைப்பர்.இவ் இருவருமே, மன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆவார்கள்.ஆனால், மனச் சோர்வுள்ள நோயாளிகளுக்கு, சைக்காலஜிஸ்ட் முதன்மையாக கவுன்சிலிங் (உளவளத்) மற்றும் சைக்கோதெரபி (சைக்கோதெராபி) உள்ளிடவற்றை மேற்கொண்டு தீர்வு காண்பார்.ஆனால் சைக்கார்ட்டிஸ்ட் மனநோய், உணர்ச்சி வேகம், மனிதனின் நடத்தை செயற்பாடு போன்றவற்றை திறமையாக கையாண்டு தீர்த்து வைப்பார்கள். சைகோலஜிஸ்ட் போன்று சைக்காட்டிஸ்சும் சைக்கோதெரபியை தான் மேற்கொள்வார்கள்.எனினும் கூடுதலாக மருத்துவ வழிமுறைகளையும் கடைபிடிப்பார். மேலும், மின் வலிப்பு சிகிச்சையையும் (மின் அதிர்வு சிகிச்சைப்) மேற்கொள்வார். சைக்கார்டிஸ்ட் என்பவர் மருத்துவ தொழில் முறைகள் சார்ந்த மருத்துவர் (எம்.பி.பி.எஸ்). ஆனால், சைக்காலஜிஸ்ட் மருத்துவ பட்டம் மட்டும் பெற்றவர்.மருத்துவ தொழில் முறைகள் சாராதவர். இந்த வேறுபாடு N.G.O போன்ற தனியார் நிறுவனங்களில் "உளவியல் ஆலோசகர்" (மன நல ஆலோசகர்) என்று கூறிக் கொள்பவர்கள் அனேகருக்கு தெரிவதில்லை. (அவர்கள் சைக்கோலஜி (உளவியல்) மட்டுமே ஓரளவிற்கு தெரிந்து வைத்துள்ளனர்.அதனை அரைகுறைவாக தெரிந்து கொண்டு உள ஆரோக்கியமாக இருப்பவர்களைக்கூட மனநோயாளிகளாக்கிய பல சம்பவங்களை நாம் எமது நீதிமன்ற நடைமுறையில் காண்கின்றோம்) பொதுவாக சைக்கோலஜி மற்றும் சைக்கியாட்ரிடி இரண்டையும் குழப்பாது தெளிவாக அறிந்து வைக்க வேண்டும்.பொதுவாக குடும்பம் அல்லது திருமண வாழ்க்கையில் பிரசச்னை இருந்தால் அல்லது, குழந்தைகள் பாடசாலைக்குப் போக மாட்டேன் என்று அதிகம் அடம்பிடித்தால், இதெல்லாம் ஒரு ஸைக்கோலஜிஸ்டே மனநல ஆலோசனை (கவுன்சலிங்) மூலமா சரிபண்ணிவிடலாம்.ஆனால், ஒரு வேளை அப்படி சரியாகாவிடின் அந்தக் குழந்தைக்கு அடிப்படையிலேயே மூளையில்ஏதோ ஒரு வேதிப் பொருளின் சமநிலை தவறி இருந்தா அதைச் சரி பண்ணறதுக்கு ஒரு மனநலவியல் மருத்துவர் (ஸைக்கியாட்ரிஸ்ட்- உளவியலாளர்) தேவை.எனவே சாதாரண உளவியல் பாதிப்புக்குள்ளானவர்களை சைக்கோலஜிஸ்ட் குணப் படுத்திவிடுவார். ஆனால் மூளையில் இரசாயண தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை சைக்கோலஜிஸ்டுக்களால் சுகப் படுத்த முடியாது.அவர்களை சைக்கியார்டிஸ்தான்குணப்படுத்த முடியும். பாதிக்கப்பட்டவர் ஏதேனுமொரு விரக்தியில் பாதிக்கப்பட்டுள்ளாரா? அல்லது மூளையில் ஏற்பட்ட ஏதேனுமொரு இரசாயண தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளரா? என்பதனை முதலில் அறிந்து.அதற்கேற்ப சைக்காலஜிஸ்ட் அல்லது உளவியலாளர் இடம் காண்பித்து சிகிச்சை பெற வேண்டும்.

குறிப்பு   உங்கள் சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும். அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார். கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் .

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv