இன்றைய (12-07-2016) கேள்வி பதில்


கேள்வி:                 அன்பான சட்டத்தரணி சுதன் அண்ணா!நான் வாசுகி.மட்டக்களப்பு மாங்காடு.நான் 2014ஆம் ஆண்டு என் தந்தை ஒருவருக்கு 50,000/− பணமாக கடன் கொடுத்தார்.அதற்காக 3%வட்டி என்று சொல்லி வெற்று promisory note ல் கையெழுத்து வாங்கி வைத்திருக்கிறார்.அதற்கு சான்றாக காணி உறுதி ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறார்.கடனை திருப்பி செலுத்த பல முறை கேட்டும் கடன் வாங்கியவர் இது வரை கொடுக்கவில்லை.கடனை திரும்பி வாங்க எவ்விதம் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறவும்.நன்றி அண்ணா.

  பதில்:−                  அன்பான சகோதரியே!பொதுவாக ஒருவருக்கு கடன் கொடுத்தால்,அதனை மூன்று ஆண்டுகளுக்குள்  திரும்ப பெறவேண்டும். வரையறை சட்டத்தின் படி ஒவ்வொரு பிரச்சனைக்கும் எத்தனை ஆண்டுக்குள் வழக்கு தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் படி கடனை திரும்ப பெற அல்லது அவர் கடன் திரும்ப செலுத்த வில்லை என அவர் மீது வழக்கு தொடர மூன்று ஆண்டுகள் தான் கால அவகாசம்.ஆனால் இந்த மூன்று ஆண்டுகள் எப்போது தொடங்குகிறது என்பதற்கு சில விதிகள் உண்டு. உங்கள் தந்தையிடம் அவர் கடன் பெற்றது 05.07.2016 என வைத்து கொள்வோம்.அதன் பின் அடுத்த மூன்று ஆண்டுக்குள் ஒரு முறை வட்டியோ அல்லது சிறு தொகையோ தந்தால், அப்படி அவர் கடைசியாய் பணம் தந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் கால அவகாசம் ஆரம்பிக்கும். அது போலவே உங்கள் தந்தை அவரை பணம் திரும்ப தர சொல்லி கடிதம் எழுதி, அதற்கு அவர் "குறிப்பிட்ட திகதியில் பணம் திரும்ப தருகிறேன்" என பதில் கடிதம் தந்திருந்தால் அன்றிலிருந்து மூன்று ஆண்டுகள் கால அவகாசம் தொடங்கும். இதற்கு ” கடன் ஒப்பு"(Acknowledging the debt) என்று சொல்வார்கள் (உங்கள் தந்தை எழுதும் கடிதம் இங்கு முக்கியமில்லை. அவர் எழுதும் பதில் கடிதமே முக்கியம்). நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும் போது அவர் எந்த பணமும் தரவில்லை அல்லது கடனை ஒப்பு கொண்டு சமீபத்தில் எந்த கடிதமும் தர வில்லை என்பது தெரிகிறது. சிவில் நீதிமன்ற முறையில்(இணக்க சபை மூலமாக)நீங்கள் வழக்கு தொடர வேண்டுமெனில், அவரது கடனை உறுதி செய்யும்படி அவரிடம் தற்போதைய திகதியில் ஒரு கடிதமோ, அல்லது அவர் கடனுக்கு சிறு வட்டியோ தற்போது வாங்கினால் மட்டுமே நடக்கும்.இவை முடியாத பட்சம் சிவில் வழக்கு தொடர முடியாது . ஆனால் உங்களிடம் பணம் வாங்கி கொண்டு தராமால் ஏமாற்றி விட்டார் என அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர முடியும்.இதற்காக அவர் மீது சட்டத்தரணி மூலமாக எச்சரிக்கை தகவல் அனுப்பினாலே அவர் உடனே இறங்கி வர வாய்ப்புண்டு.ஆகவே நீங்கள் உடனே ஒரு வழக்கறிஞரை ஆலோசித்து அதற்கேற்ப சட்ட நடவடிக்கை எடுக்கவும்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv