இறந்தும் மற்றவர்களை வாழ வைத்த விஷால்....


கேரளாவில் மூளைச்சாவு அடைந்த விஷால் என்ற 15 வயது சிறுவனின் இதயம், சிறுநீரங்களை அவனது பெற்றோர் தானமாக அளித்துள்ளனர்.

கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த தம்பதி சதீஷ்- ஷீலா, இவர்களுக்கு இசீஸ், விஷால் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.

சதீஷ் தன்னுடைய மூத்த மகன் இசீசுடன் துபாயில் வசித்து வருகிறார், ஷீலா பத்தாம் வகுப்பு படிக்கும் விஷாலுடன் திருவனந்தபுரத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் விஷால் பள்ளிக்கு சென்ற போது, வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த விஷாலை, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி விஷால் மூளைச்சாவு அடைந்துள்ளான், இதனை அவனது பெற்றோர்களிடம் தெரிவித்தவுடன் மகனை இழந்த துக்கம் தாளாமல் கதறி அழுதுள்ளனர்.

தனது மகன் இறந்த பிறகும் பிறர்மூலம் வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்பியதுடன், உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து விஷாலின் இதயம் அகற்றப்பட்டு நேற்று காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானப்படை விமானம் மூலம் கொச்சிக்கு காலை 9.30 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கிருந்து 15 நிமிடத்தில் கொச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற இதயம் அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சந்தியா (27) என்ற பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

இதேபோல விஷாலின் சிறுநீரகங்கள் திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரியங்கா (30) என்ற பெண்ணுக்கும், கண்கள் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பகருதீன் (39) என்பவருக்கும் தானமாக வழங்கப்பட்டது.
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv