கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை: மரணத்தின் விளிம்பில் நடந்த ஒரு போராட்டம்


அவுஸ்திரேலியாவில் முதல் முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்டை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், வயிற்றுக்குள் இருக்கும் கருவின் முதுகெலும்பு தண்டுவடம் சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்துள்ளது.

இதற்கு Spina bifida என்று பெயர், அவுஸ்திரேலியாவில் 2,000 குழந்தைகள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், 24 வார கர்ப்பிணியாக அப்பெண் இருப்பதால், இந்த கருவுக்கு அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என Brisbane's Mater மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்,

இந்த அறுவை சிகிச்சைக்கு அமெரிக்காவை சேர்ந்த சிறப்பு குழுவும் உதவியுள்ளது, மொத்தம் 40 மருத்துவர்கள் சேர்ந்த குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளது.

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்து கருப்பை அகற்றப்பட்டு, அந்த கருப்பைக்கு திரவம் ஊற்றப்பட்டுள்ளது, திரவம் ஊற்றப்பட்டதால் கருவானது மிதந்து மேலே வந்துள்ளது, இதன்பின்னர் கருவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர், மீண்டும் கர்ப்பிணியின் வயிற்றுக்குள் கருப்பையானது வைக்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவர் Wellons கூறியதாவது, இது அபாயமான ஒன்றாகும், இந்த அறுவை சிகிச்சையின் அப்பெண்ணின் உயிர்பறிபோவதற்கும் வாய்ப்பிருக்கிறது, இருப்பினும் மரணத்தின் விளிம்பிற்கு சென்று போராடி வென்றுள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும், இந்த அறுவைசிகிச்சையின் மூலம் குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv