கைப்பேசி வசதி இல்லாத 55 ஆயிரம் கிராமங்கள்!


ஒட்டு மொத்த இந்தியாவில் கைப்பேசி வசதி இல்லாத 55 ஆயிரம் கிராமங்களில் உடனடியாக கைப்பேசி சேவையை துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டில் உள்ள 5.97 லட்சம் கிராமங்களில் 5.41 லட்சம் கிராமங்களுக்கு தற்போது கைப்பேசி சேவை வசதி உள்ளது. எனினும், இன்னும் 55,669 கிராமங்களில் கைப்பேசி சேவை வசதியே இல்லாமல் உள்ளது.

இந்நிலையில், விரைவில் இந்த கிராமங்களில் மொபைல் கவரேஜை ஏற்படுத்தி அங்கு கைப்பேசி சேவைகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை தகவல்தொடர்பு துறை இணை மந்திரி மனோஜ் சின்ஹா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கைப்பேசி சேவை வசதி இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை மாநிலங்கள் வாரியாக,

ஒடீசா - 10,398 கிராமங்கள்
ஜார்கண்ட் - 5,949 கிராமங்கள்
மத்திய பிரதேசம் - 5,926 கிராமங்கள்
மகாராஷ்டிரா - 4,792 கிராமங்கள்
சத்தீஸ்கர் - 4,041 கிராமங்கள்
ஆந்திர பிரதேசம் - 3,812 கிராமங்கள்
அருணாச்சல பிரதேசம் - 2,886 கிராமங்கள்
அசாம் - 2,885 கிராமங்கள்
பீகார் - 2,534 கிராமங்கள்
ஏற்கனவே ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் 4,752 கிராமங்களிலும், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் 2,138 கிராமங்களிலும் கைப்பேசி சேவையை மத்திய அரசு விரிவுபடுத்தி வருவது நினைவு கூரத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv