6-வது நாளாக தொடர்கிறது காட்டுக்குள் விடப்பட்டு வந்த சுட்டி சிறுவனை தேடும் பணி


ஜப்பானில் அதிகம் குறும்பு செய்ததால் அடர்ந்த காட்டுக்குள் விடப்பட்டு வந்த சுட்டி சிறுவனை 180 தற்காப்பு படை வீரர்கள் 6-வது நாளாக தேடி வருகின்றனர். நனே பகுதியில் கண்ணில் பட்டவர்கள் மீதும், வழியில் செல்லும் கார்களின் மீதும் கற்களை வீசி குறும்பு செய்ததால் சிறுவனது பெற்றோர் அவனை காட்டு வழியில் இறக்கிவிட்டு சென்றனர். 

தண்டனை தருவதற்காக இவ்வாறு செய்ததாக தெரிவித்த அவர்கள் சில நிமிடங்களில் திரும்பி வந்து பார்த்த போது சிறுவன் அந்த இடத்தில் இருந்து மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. 

உள்ளூர் வேட்டைக்காரர்களின் உதவியுடன் சிறுவனை தேடும் பணியில் 180 தற்காப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சிறுவன் மாயமான இடத்தில் இருந்து சற்று தொலைவில் கரடியின் காலடி தடம் இருப்பது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு பகலாக கடும் குளிரிலும் 6-வது நாளாக தேடும் பணி தொடர்கிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv