பூமி நேராகச் சுற்றினால் என்ன என்ன மாற்றங்கள் நிகழும்?


பூமியின்சு சுற்றுப்பாதை நீள்வட்டம். எனவே ஒரு புள்ளியில் சூரியனுக்கு அருகேயும், ஆறு மாதங்கள் கடந்த பின்னர் தொலைவிலும் இருக்கும்.

இதனால் தான் சுட்டெரிக்கும் கோடைக்காலமும், நடுங்க வைக்கும் குளிர்காலமும் ஏற்படுகிறது .

வடகோளத்தில் குளிர் காலமாகிய ஜனவரி மாதத்தில் தான் பூமி சூரியனுக்கு அருகே உள்ளது. பூமியின் அச்சு சாய்வாக உள்ளதால், சூரிய ஒளி சாய்வாக விழுகிறது. இதனால் அங்கே குளிர் காலம் நிலவுகிறது.

இந்த காலகட்டத்தில் தென் கோளத்தின் மீது நேராக சூரிய ஒளி விழுவதால் கோடை காலம் நிலவுகிறது.

ஒருவேளை பூமியின் அச்சு சாயாமல் நேராக இருந்தால் கோடை காலம், குளிர் காலம் என்றெல்லாம் பருவ மாறுதல்கள் எதுவும் இருக்காது. எப்போதும் எல்லா இடத்திலும் ஒரே தட்பவெப்பநிலை நிகழும்.


உதாரணத்திற்கு, டார்ச் விளக்கை ஒரே உயரத்திலிருந்து நேராகவும், சாய்வாகவும் பிடித்து ஒளியை அடித்து சோதனை செய்து பாருங்கள்.

நேராகப் பிடிக்கும் போது அந்த டார்ச் லைட் தரும் ஒளி முழுவதும் வட்ட வடிவில் படரும், சாய்வாக பிடிக்கும் போது முட்டை வடிவில் கூடுதல் பரப்பளவில் அதே ஒளி படரும்.

எனவே ஒவ்வொரு புள்ளியிலும் விழும் ஒளியின் அளவு குறையும். இவ்வாறு தான் ஒரு சமயத்தில் நேராகவும் ஒரு சமயத்தில் சாய்ந்தும் படருவதன் மூலம் பருவகால மாற்றம் ஏற்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv