பூனை ஒரு பௌதீகவியல் அறிவாளி என்பது உங்களுக்கு தெரியுமா?


புதிய ஆய்வொன்று பூனைகளுக்கு புவியீர்ப்பை உணர்ந்து செயற்படும் ஆற்றலுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த வாரம் கியோட்டா பல்கலைக்கழத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுப் பத்திரிகையிலே மேற்படி தெரியவருகிறது.

ஆனாலும் மனிதன் அல்லாத விலங்கினங்கள் புவியீர்ப்பை உணர்ந்து செயற்படுவது பூனைக்கு மட்டுமே உரிய இயல்பல்ல.

வேறு விலங்கினங்களும் இவ்வியல்பை காட்டுவது முன்னைய ஆய்வுகளிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

இது பொதுவாக எல்லா விலங்கினங்களும் புவியீர்ப்பை உணரும் திறனை கொண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிட்ட ஆய்வாளர் சில பெட்டிகளை எடுக்க வேண்டும்.

அவற்றில் சில பொருட்களை கெண்டிருக்கலாம், சில வெறுமையானதாக இருக்கலாம்.

அவை குலுக்கப்படும் போது பொருட்களை கொண்டவை சத்தத்தை பிறப்பிப்பதுடன், பொருட்களை கொண்டிராதவை ஒலியை பிறப்பிக்கப் போவதில்லை என்பது வெளிப்படையானதே.

ஆனால் இங்கு பொருட்களை கொண்டிருப்பவை சத்தத்தை பிறப்பிக்காத வண்ணமும், பொருட்களை கொண்டிராதவை சத்தத்தை பிறப்பிப்பது போன்றும் குலுக்கப்பட்டு பூனைகளின் எதிர் விளைவுகள் ஆராயப்பட்டது.

இதற்கென 30 பூனைகள் பயன்படுத்தப்பட்டிருந்தது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv