வாலிபரின் வயிற்றுக்குள் இருந்த கரு: வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்!


மலேசியாவில் வாலிபர் ஒருவரின் வயிற்றில் இருந்த இறந்துபோன கருவினை அறுவை சிசிக்கையின் மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

Hasmah Ahmad (38) என்ற பெண்ணின் 15 வயது மகனான Mohd Zul Shahril Saidin(15)- க்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்ததில் இவரது வயிற்றுக்குள் இறந்துபோன கரு இருப்பது கண்டறியப்பட்டது, அதாவது இவரது தாய் கர்ப்பம் தரித்தபோது இரட்டை கருக்கள் உருவாகியுள்ளன,

அதில், ஒரு கருவானது Mohd- யின் தொப்புள் கொடியின் வழியாக அவனது வயிற்றுக்குள் சென்றுள்ளது.

இது அறியாத Hasmah தனக்கு ஒரு குழந்தை தான் பிறந்துள்ளது என நினைத்து Mohd- யினை வளர்த்து வந்துள்ளார், இந்நிலையில், Mohd வயிற்றுக்கள் இருந்த கருவின் கை, கால்கள், தலைமுடி மற்றும் ஆண் இனப்பெருக்க உறுப்பு போன்றவை வளர்ச்சியடைந்துள்ளது.

ஆனால், முகத்தில் உள்ள பாகங்கள் மட்டும் சிறிது வளர்ச்சி அடையவில்லை, இது 500,000 பேரில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் அரிதான ஒன்றாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,

இரட்டை கருக்கள் உருவாகும் பட்சத்தில்,அதில் ஒரு கரு மற்றொரு கருவின் தொப்புள் கொடியின் வழியாக சென்று அங்கு வளர்ச்சியடையும், ஆனால் எப்போது தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளிவருகிறதோ அப்போதே, இந்த கருவானது உயிரிழந்துவிடும், இக்கரு வாழ்வதற்கான எவ்வித சாத்தியக்கூறும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, Mohd- க்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் அவன் வயிற்றில் இருந்த கரு வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv