அமேசன் நிறுவனத்தின் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை -Photos


அமேசன் நிறுவனத்தின் ஊடாக பொருட்களை அதிகமான தமிழ் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வது வழமையானதே .நானும் பல தடவை கொள்வனவு செய்துள்ளேன்.இன்று அதிகாலை  வங்கி கணக்கு மிகுதியை சரி பார்க்கும் போது £79 amazon prime எனும் பெயரில் பணம் அறவிடப்பட்டிருந்தது.எந்த பொருட்களும் கொள்வனவு செய்யாத நிலையில் அறவிடப்பட்டிருந்தது  குழப்பமாகவே இருந்தது.

யாரோ எனது வங்கி அட்டையை (Debit card) பயன்படுத்தி விடடார்கள் என நினைத்தேன்.உடனே எனது மின் அஞ்சலை பார்த்தபோது எவ்வித மின் அஞ்சலும் அமேசனிலிருந்து வரவில்லை.

மீண்டும்   வங்கி கணக்கு மிகுதியை பரிசோதித்த பொழுது Amazon prime luxembourg என்ற பெயரிலே எனது பணம்அறவிடப்பட்டிருந்தது.

இது அமேசன் ஆல் நேரடியாக எடுக்கப்படட பணமா அல்லது வேறு  யாராவது எனது அட்டையை பயன்படுத்தி அமேசன் ஊடாக பொருட்களை வேண்டினார்களா என்று குழப்பமாக இருந்தது.

உடனே amazon prime luxembourg  என்ற சொல்லை google ஊடாக தேடும் போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.ஏனெனில் அமேசன் நிறுவனமே என்னுடைய பணத்தினை எடுத்திருந்தது.உடனே எனது வங்கியுடன் தொடர்பு கொண்டு எனது பணம் என்னுடைய அனுமதி இன்றி அமேசன் நிறுவனம் எடுத்துள்ளது.அதனை திரும்ப தருமாறு கோரிக்கை வைத்தேன்.
அவர்கள் உங்கள் பணம் திரும்பி தர ஏற்பாடு செய்கின்றோம் எனவும் உடனே அமேசான் ஐ தொடர்பு கொள்ளுமாறும் தொடர்பு இலக்கத்தை தந்தனர் (08004962454).

 நான் அமேசன் ஐ  தொடர்பு கொண்டு என்னுடைய அனுமதி இன்றி என் பணம் அறவிடப்பட்டது என்று முறையிட அவர்கள்   "நீங்கள் பதிவு செய்யப்படட வாடிக்கையாளர் என்பதால் ஒரு வருட சந்தாவாக £79அறவிடப்பட்டதாக  கூறினர்.என்னுடைய அனுமதி இல்லாமல் ,எனக்கு தெரியாமலேயே எவ்வாறு உங்களால் அறவிட முடியும் என கொஞ்சம் கோபமாகவே வினவினேன்.சந்தா பணம் வழங்க எனக்கு விருப்பமில்லை உடனே எனது பணத்தை மீள தருமாறு கூறினேன்.உடனே 5-7 வேலை நாட்களுக்குள் வழங்குவதாக உறுதி அளித்தனர்.


முக்கிய விடயம் என்னவெனில் இப் பணத்தை அமேசன் நிறுவனம் வாடிக்கையாளர் அனுமதி இன்றி தெரியாமலேயே பல வாடிக்கையாளர்களிடம் அறவிட்டுள்ளது.எனவே அமேசன் ஊடாக கொள்வனவு செய்பவர் நீங்கள் என்றால் உங்கள் வங்கி கணக்குகளைசரி பார்ப்பது மட்டுமன்றி,நீங்கள் உங்கள் அமேசன் கணக்கை (amazon account ) மூடி விடுவது  (deactivated) நல்லது. வீணாக எங்கள் பணத்தை எங்களுக்கு தெரியாமல் கொள்ளையடிப்பவர்களிடம் இருந்து எச்சரிக்கையாய் இருங்கள்,,,

ஒவ்வொரு நாளும் முக நூலை பார்ப்பது போல் உங்கள் வங்கி கணக்குகளை சரி பார்க்கவும்.

முத்து விஜிதன் 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv