இனி அங்கவீனர்களும் எழுந்து நடக்கலாம் : வந்துவிட்டது 3டி ஆடை...


உடலின் பெரும்பகுதி இயங்காத அங்கவீனர்கள் தமது வாழ்க்கையில் அதிகமான காலத்தினை சர்க்கர நாற்காலியிலேயே செலுத்துகின்றனர்.

இவர்கள் எழுந்து நடப்பதற்கு பிறரின் உதவி தேவைப்படும்.

இதனால் துணைச் சாதனங்கள் சில உருவாக்கப்பட்டுள்ளன.

ஆனால் முதன் முறையாக படிப்படியாக நடப்பதற்கு உதவக்கூடியதும், உடலின் வெளிப்புறத்தில் அணியக்கூடியதுமான ஆடை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

3டி தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இவ் ஆடை Ekso-Suit எனஅழைக்கப்படுகின்றது.

இவ் ஆடையின் உதவியுடன் பிறநபர்களின் துணை இன்றி தனியாக நடந்து இடம்பெயர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் ஆடை தொடர்பான மேலதிக விளக்கத்தினை தரக்கூடிய வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv