வாக்களிக்க பணம் வாங்கினால் இதுதான் நடக்கும்


தமிழகமெங்கும் பணம் கரைபுரண்டு ஓடி இருக்கிறது. இரண்டு தொகுதியில் தேர்தலே நிறுத்தி வைக்கப்பட் டிருக்கிறது... தமிழகத்தில் தேர்தல் மிக நியாயமாக நடைபெறுகிறது என்ற பிம்பத்தை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. 

ஆனால், எப்படி தேர்தல் நடைபெறுகிறது என்பது ஒவ்வொரு தமிழனின் மனசாட்சிக்கும் தெரியும். தேன் தடவாத வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், ‘ஜனநாயகம் கேலி கூத்தாகி இருக்கிறது’ . 

மறைத்து பேசாமல் உண்மையை பேச வேண்டுமென்றால், இந்த கேலிக் கூத்தில் நம் அனைவருக்கும் பங்கு இருக்கிறது...‘நம் பணத்தை கொள்ளையடித்து தானே நமக்கு தருகிறார்கள்... பணம் வாங்கி கொள்வோம்... ஆனால், எங்களுக்கு பிடித்தவர்களுக்குதான் நாங்கள் வாக்களிப்போம்...’ என்பது நமக்கு நாமே சொல்லி கொள்ளும் சமாதானங்கள். ஆனால், இது எதுவும் இனி எடுபடாது. ஆம், நாம் நமக்கு தெரிந்தே இந்த ஜனநாயகத்தை மெல்ல மெல்லக் கொன்று கொண்டிருக்கிறோம். நம் எதிர்காலத்தை நாமே சூன்யம் ஆக்கிக் கொண்டிருக்கிறோம். 

ஜனநாயகம் என்னும் உன்னத அமைப்பு

ஜனநாயகத்தில் சில அபத்தங்கள் இருக்கலாம். அதில் சீர் செய்ய வேண்டியது நிறைய இருக்கலாம். ஆனால், அனைவரின் பங்களிப்பையும் கோரும் ஒரு உன்னத அமைப்பு இது. இதை விட சிறந்த அமைப்பு ஒன்று இருப்பதாக தெரியவில்லை. ஆனால், பணம் என்னும் புற்று, இந்த அமைப்பை மெல்ல அரித்துக் கொண்டிருக்கிறது.  ஒரு நாள்  அந்த புற்று இந்த அமைப்பை மொத்தமாக கொன்று விடும். அன்று நாம் நமது திசை தெரியாமல் தத்தள்ளிக்க போகிறோம். 

ஆம், இது எதுவும் மிகையல்ல. ஜனநாயகம் என்னும் அமைப்பே பொது சமூகத்தை அரசியலில் ஈடுபட வைப்பது. ஆனால், பணம் கொடுப்பது, வாங்குவது மூலம் அந்த பொது சமூகத்தை அரசியலில் இருந்து தள்ளி வைக்கிறோம். உண்மையில் இந்த தேர்தல் அமைப்பு மூலம் சில மாற்றத்தை கொண்டு வரலாம் என்று நினைக்கும் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை விதைக்கிறோம்.இந்த அவநம்பிக்கைகள் பெரிதாகிக் கொண்டே போகும் பட்சத்தில் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று யோசித்து பாருங்கள்...? நிச்சயம் அவர்கள் இந்த ஜனநாயக முறையை வெறுப்பார்கள்... சர்வாதிகாரம்தான் தீர்வென்று நம்புவார்கள்.  அதற்கான வழிகளை அவர்கள் ஆராய்வார்கள். ஆனால், சர்வாதிகாரத்தை அடைவதற்கான எந்த வழிகளும் சாத்வீகமானது இல்லை. 

அப்படியானால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும்....? நிச்சயம் கலகம்தான் பிறக்கும். ஆயுதம்தான் தீர்வென்றும் நம்பத் துவங்குவார்கள். அரசு அதை ஒடுக்க அனைத்து வழிமுறைகளையும் கையாளும். அதில், நாம்தான் சிக்கி சீரழிவோம்... நாம் இதைதான் விரும்புகிறோமா...? நமக்கு அமைதியான வாழ்வின் மீது விருப்பமில்லையா...? 

விகடன் 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv