“வை ராஜா மை”... மிஸ்டு கால் கொடுத்து ஒரு கோடி இளம் வாக்காளர்களைக் கவர் செய்யும் தேர்தல் ஆணையம்


முதன்முறையாக ஓட்டு போடவுள்ள இளம் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘வை ராஜா மை' என்ற விழிப்புணர்வு மிஸ்டு கால் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் இம்முறை சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான இளம் வாக்காளர்கள் உள்ளனர். முதல் முறை வாக்குப் பதிவு செய்யும் இவர்கள் அனைவரும், மறக்காமல் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றச் செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், தேர்தல் கமிஷன் அனுமதியுடன் 'ஸ்மைல் சேட்டை' என்ற 'யூ டியூப்' வீடியோ பதிவேற்றத்தினர், 'வை ராஜா மை' என்ற பெயரில், 24 மணி நேர, 'மிஸ்டு கால்' சேவையை துவக்கி உள்ளனர்.இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கூறுகையில், "வாக்காளர் பட்டியலில், ஒரு கோடி இளம் வாக்காளர்கள் உள்ளனர். ஓட்டுப் பதிவில், இளம் வாக்காளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.

மிஸ்டு கால்... 

எனவே, இளம் வாக்காளர்களை ஓட்டு போட வைக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளோம். இதற்காக ஓட்டு போட ஆர்வமுள்ள, இளம் வாக்காளர் கள், 78787 45566 என்ற மொபைல் எண்ணில், 'மிஸ்டு கால்' கொடுக்கும்படி கேட்டு வருகிறோம்.

நம்பிக்கை... 

இது குறித்து, சமூக வலைதளங்களில், 24 மணி நேரமும் பிரசாரம் மேற்கொண்டுள்ளோம். 'மிஸ்டு கால்' கொடுப்பவர்கள் நிச்சயம் ஓட்டும் போடுவர் என்ற நம்பிக்கை உள்ளது.

1.17 லட்சம் பேர்... 


மே, 2ம் தேதி துவங்கிய, இப்பணியில் இதுவரை 1.17 லட்சம் பேர், 'மிஸ்டு கால்' கொடுத்துள்ளனர். ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து எத்தனை முறை மிஸ்ட் கால் கொடுத்தாலும், ஒரு முறை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறையும் மிஸ்ட் கால்களின் எண்ணிக்கை பதிவேற்றப்படும்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv