இலவசத்தை அறிவித்தார் சீமான்! இதுதான் உண்மையிலே சூப்பரான இலவசம்


தமிழக தேர்தல் களத்தில் இலவச பொருட்களை அறிவித்து தேர்தலை சந்திப்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகின்ற சூழ்நிலையில். இம்முறை திமுக இலவச அறிவிப்புகளை தவிர்த்தாலும், அதிமுக தவிர்ப்பதாக இல்லை. 

 இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் சில விலைமதிப்பற்ற இலவசங்களை அறிவித்துள்ளார். ஒரு தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், இரு திராவிட கட்சிகளின் 50 ஆண்டு கால ஆட்சியில், தமிழகத்தின் தலைநகரிலே கழிவுநீர் வெளியேற கால்வாய் இல்லை, மழைநீர் வெளியேற வாய்க்கால் இல்லை.

 எல்லா காசையும் வாய்க்குள்ள போட்டால் வாய்க்கால் எப்படி வரும் என சீமான் குற்றம் சாட்டினார். மேலும் அவர், திருப்பியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்று அறிவித்துள்ளனர். நான் ஒன்று கேட்கிறேன், நீங்க இப்ப தான் ஆட்சிக்கு வர போகிறீர்களா? இதுவரை வரவில்லையா? அது சொல்லுவதற்கு எனக்கு தான் உரிமை இருக்கு. நான் ஆட்சிக்கு வந்தால் கல்வி இலவசம். அரிசி, பருப்பு, ஐந்து, பத்து, ஆடு, மாடு, கோழி, மிக்ஸி, கிரைண்டர் இல்லை, அறிவை வளர்க்கும் கல்வி இலவசமாக அளிக்கிறேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv