சகாயத்தை திமுக,அதிமுகவுக்கு ஏன் பிடிக்கவில்லை?---சீமான்!


சகாயம் ஐ.ஏ.எஸ். அதிகாரியை ஏன் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை என்பதற்கான காரணம் இதுதான் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள சீமான், நாமக்கல் மாவட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ' ஐ.ஏ.அதிகாரி சகாயத்தை ஏன் திமுக அதிமுகவுக்கு பிடிக்கவில்லை தெரியுமா? அவர் லஞ்சம் தவிர் என்றார் திமுகவுக்கு பிடிக்கல. நெஞ்சை நிமிர்த்து என்றார் அதிமுகவுக்கு பிடிக்கல.அதனால் ரெண்டுபேருக்குமே பிடிக்காம போச்சு. இரண்டு கட்சியும் ஊழல் கூட்டம்.'கேங் ரூல்', 'குண்டாஸ் ரூல் ' மாதிரி ஆச்சு.மண்ணின் மக்களுக்கான ஆட்சியா இல்லை.

மண்ணின் வளங்கள் களவு போகிறது. கேரளாவுல ஆற்று மணல் அல்ல முடியாது. மணல் அல்ல அங்கு தடை.ஆந்திராவிலும் அதே நிலைதான்.அதே போல கர்நாடகாவிலும் தடை இருக்கு. இங்கே ஆற்று மணல் அல்லவேண்டாம் என்று போராடினால் சிறையில் போடுகிறார்கள். இதுதான் தமிழ் நாட்டின் நிலை' என்று கூறினார்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv