யார் கேட்டது அலைபேசி. எவன் கேட்டான் மிக்ஸி. எவன் கேட்டான் கிரைண்டர்: ஜெ.வுக்கு சீமான் கண்டனம்


தமிழகத்தில் இலவசங்களை தந்து அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார்.

 திருவண்ணாமலையில் நடந்த அக்கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், மக்களுக்கு தேவை தரமான கல்வி. இலவசங்கள் எதுவும் தேவையில்லை. ரேஷன் கார்டுக்கு அலைபேசி இலவசமாம். அலைபேசி வாங்கி, அம்மா ஜெயலலிதாவோட நேரடியாக பேகிக்கிறதா. யாருக்கு பேசுறது. யார் கேட்டது அலைபேசி. 

எவன் கேட்டான் மிக்ஸி. எவன் கேட்டான் கிரைண்டர். யார் இதையெல்லாம் கேட்டு போராடினார்கள். நான் கேட்பது கல்வி, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற சம்பளம். அதைக்கொண்டு மேண்மையான வாழ்க்கை என்பதை நான் கேட்கிறேன். இவ்வாறு பேசினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv