அவளது கடைசி வியாழன் அப்படி இருந்திருக்க வேண்டாம்...! - கேரளாவில் ஒரு நிர்பயா


ஒரு பெண் மோசமாக பலாத்காரம் செய்யப்படுகிறாள். பலாத்காரம் செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவளது மார்பும், பிறப்புறுப்பும் சிதைக்கப்படுகிறது. இறுதியாக அவள் கடும் வலிகளுடன் மரணிக்கிறாள். 

- இது யாரையோ உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறதா...? தேசமே கொந்தளித்த ஒரு சம்பவத்தை நினைவுக் கூர முடிகிறதா...? ஆனால் இந்த வரிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அந்த டெல்லி சம்பவம் குறித்தல்ல. இது நம் அண்டை மாநிலமான கேரளாவில் நடந்தது. ஆனால், தொலைவில் இருக்கும் டெல்லியில் நடக்கும் சம்பவம் உடனே செவிகளுக்கு எட்டி விடுகிறது. ஆனால், அண்டை மாநிலத்தில் நடந்த சம்பவம் நம் செவிகளுக்கு எட்ட ஐந்து நாட்கள் ஆகி இருக்கிறது. 

 அவள் அன்று பட்டாம்பூச்சிகள் குறித்து யோசித்திருக்கலாம்: அவள் ஒரு சட்டக் கல்லூரி மாணவி. உங்கள் பிடித்த பெண்ணின் பெயரை அவளுக்கு நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். கடந்த வியாழன் அன்று, கேரள மாநிலம், பெரும்பாவூர் வட்டோலிப்பிடி கால்வாய் அருகே இருக்கும் தனது வீட்டில் அவள் தனியாக இருக்கிறாள். 

அவளுக்கு பிடித்த கவிதையை அப்போது வாசித்துக் கொண்டிருந்திருக்கலாம் அல்லது நல்ல இசையை கேட்டுக் கொண்டிருந்திருக்கலாம். அமைதியாக அமர்ந்து பட்டாம்பூச்சிகள் குறித்து யோசித்துக் கொண்டிருந்திருக்கலாம். எதுவாகினும் அது தான் அவளது கடைசி வியாழன். ஆம். யாரோ ஒரு மிருகத்தால்... மன்னிக்கவும் மிருகங்கள் வல்லுறவு கொள்வதில்லை. அது மிக நாகரிகமானவை. எவனோ ஒருவனாலோ அல்லது பலராலோ வல்லுறவு கொள்ளப்படுகிறாள். பிறகு கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டு கொல்லப்படுகிறாள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv