தமிழக தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்


தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது. அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தவிர மற்ற நாட்களில் பணி நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 

வேட்பு மனு பரிசீலனை 30-ந் தேதி நடைபெறும். வேட்புமனு வாபஸ் பெற மே மாதம் 2-ந் தேதி கடைசிநாள். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 

 இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிருபர்களிடம் கூறியதாவது:-

 சட்டசபை தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 234 தொகுதிகளிலும் அனைத்து வேலை நாட்களில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். தொகுதியில் உள்ள தேர்தல் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv