நாங்க ஒரு விரலை உயர்த்தாவிட்டால் நீங்க முன்னாள் நடிகை.. ஜெ.வுக்கு சீமான் எச்சரிக்கை

நாங்கள் ஒரு விரலை உயர்த்தாவிட்டால், ஜெயலலிதா ஒரு மார்க்கெட் இழந்து போன முன்னாள் நடிகை. ஒரு பய உங்களை சீண்ட மாட்டான். அரிசிக்கும், பருப்புக்கும், வேட்டிக்கும், சேலைக்கும் கையேந்தி நிற்கும் இந்தப் பிச்சைக்காரப் பயலுக போட்ட பிச்சைதான் உங்களோடமுதல்வர் பதவி என்று காட்டமாக கூறியுள்ளார் நாம் தமிழர் தலைவர் சீமான்.

நாம் தமிழர் சார்பில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். இதில் நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் சிவக்குமார் (ராமநாதபுரம்), ராஜீவ்காந்தி (திருவாடானை), முகம்மது கடாபி (முதுகுளத்தூர்), ஹேமலதா பாண்டியன் (பரமக்குடி) ஆகியோரும் கலந்து கொண்டனர். 

ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த பிரசாரப் பொதுக் கூட்டத்தில் திரண்டிருந்த மக்களிடையே சீமான் பேசிய பேச்சிலிருந்து... பிணத்தைப் புணர்ந்த சிங்களர்களைக் கண்டு கொள்ளாத காங். அற்ப வெள்ளத்தில் மக்களை காப்பாற்ற வக்கற்ற அரசு இது. இவர்கள் அணு உலை வெடித்தால் எப்படி மக்களை காப்பார்கள். 

இறந்த பிணத்தை புணர்ந்த சிங்களர்களின் கொடூரத்தை கண்டுகொள்ள மறுத்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அவர்களின் துரோக செயலுக்கு துணை போனவர்கள் திமுகவினர். இதனை மறந்து விடாமல் கவனத்தில் வைத்து கொண்டு இந்த தேர்தலை அணுக வேண்டும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv