அடிக்கடி பதவியேற்பு விழா? பாராட்டு விழா?: சீறும் சீமான்


5 ஆண்டுகளில் அமைச்சர்களை மாற்றிமாற்றி நாட்டை கெடுப்பார் ஜெயலலிதா, 5 ஆண்டுகளில் பாராட்டு விழா நடத்தியே நாட்டை கெடுப்பார் கருணாநிதி. இது தான் இரு ஆட்சிகளுக்கும் இடையிலான வேற்றுமை என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். 

 நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கார்வண்ணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த தேர்தல் பண நாயக்கத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் போர். பணம் படைத்தவர்கள் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

 அடிக்கடி பதவியேற்பு விழா நடந்தால் அது அதிமுக ஆட்சி. அடிக்கடி பாராட்டு விழா நடந்தால் அது திமுக ஆட்சி. இது தான் இரண்டு ஆட்சிகளுக்கும் இடையேயான வேறுபாடு. அம்மையார் ஜெயலலிதா 5 ஆண்டுகளில் அமைச்சர்களை மாற்றிமாற்றி நாட்டை கெடுப்பார், ஆனால் கருணாநிதி 5 ஆண்டுகளில் வெறும் பாராட்டு விழா நடத்தியே கெடுப்பார் என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv